Monday, July 7, 2014

முன்னுரை:


God Revealed: Revisit Your Past to Enrich Your Future (Morgan James Faith) Paperback – February 2, 2014  by Fred Sievert (Author) என்ற புத்தகத்தைப் படித்த பொழுது என் கடந்த கால வாழ்க்கையில் நிகழ்ந்த பல சம்பவங்கள் தெய்வாதீனமாக நிகழ்ந்தவையாகப் புலப்பட்டன.   அந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்தெழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

சிறு பிள்ளையாக இருந்ததிலிருந்து தொடங்கி, பள்ளிப் படிப்பு, உயர் கல்வி, வேலை,மண வாழ்க்கை என்று கடந்து வந்த வாழ்க்கைப் பாதையைப் பின் நோக்குங்கால் பல முறை தெய்வீக ஆற்றல் வழி நடத்தியதை உணர முடிகிறது.  இந்நிகழ்ச்சிகள் நடுக்கும்போதொவெனில் நான் அவ்வாறு உணரவோ, தெய்வீக ஆற்றலுடன் தொடர்பு படுத்திப் பார்க்கவோ இல்லை! இந்நிகழ்ச்சிகளைத் தொகுத்து பகிர்ந்து கொள்வதன் மூலம் இவற்றைப் படிக்கும் மற்றவர்களும் தங்கள் வாழ்க்கையில் தெய்வாதீனம் என்று அடையாளம் காணக்கூடிய சம்பவங்களைக் கண்டு கொள்ளவும், வரும் காலத்தில் நிகழக்கூடிய தெய்வாதீனமான சம்பவங்களைப் புரிந்து இறைவனுக்கு நன்றி செலுத்தவும்  உதவும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நிகழ்ச்சிகளை என் மனத்தில் மிகவும் ஆழமாகப் பதிந்த நிகழ்ச்சியில் தொடங்கி,  வரிசையாக நினைவுக்கு வரும் சம்பவங்களைக் கூறவிருக்கிறேன்.  பின்னால் புத்தக வடிவில் வெளியிடும் பொழுது இந்த வரிசையை மிகச் சிறு வயதிலிருந்து தொடங்கி நிகழ் காலம் வரை என்று மாற்ற எண்ணுகிறேன்.


3 comments:

  1. 16 ஜூலை, 2014
    “God Revealed ....” புத்தகத்தை என்னால் படிக்க முடியவில்லை. ஆனால், பல வருடங்களுக்கு முன்னால், Lin Yutang என்ற சீன ஆங்கில ஆசிரியர் எழுதியிருந்த “The Importance of Living” என்ற புத்தகம் படித்தது நினைவுக்கு வந்தது. அவர் பார்வை வேறு மாதிரி.
    அந்தப் பார்வையைக் கோடிகாட்டும், என் மனதில் பதிந்திருந்த அவர் எழுதியிருந்த ஒரு குட்டிக் கதையை, என் நினைவிலிருந்து எழுதி, Drop Box ல் வைத்துள்ளேன். பார்க்கவும்.
    அனந்த்

    ReplyDelete
  2. அவரவர் நியாயங்கள். கடவுளுக்கு நேர்ந்து கொண்டதால் தாத்தாவிற்கு வெண்படை நோய் குணமானது, பாட்டிக்கு முருகன் கனவில் வந்து ஞாபகப்படுத்தியும் சொன்னபடி செய்யாமல் ஏளனம் பேசியதால் அவருக்கு வாய்புற்று ஏற்பட்டு அகால மரணம் அடைந்தது, பின்னர் அந்த கடமையை செய்ய, அப்பா காவடி எடுத்துக்கொண்டு வழிமாறிப் போய், கூட வந்தவர்கள் எல்லோரும் வரண்டுபோன கால்வாய்களூடே காலில் செருப்பிலாமல், பல மைல்கள் குறுக்குவழியில் கோயிலுக்கு போனபோது ஒருவருக்கும் சிறுமுள்கூட குத்தாதது என்று பல அதிசயங்களை சொல்வார்கள். ஆனாலும் கடைசிகாலத்தில் ”கடவுள் புண்ணியம்” என்று ஏமந்தவையே அதிகம் என்றும் - மக்கள் செய்த முயற்சிகள் கொடுத்த கூலிதான் சற்றேனும் மரியாதையைக் காப்பாற்றியது என்றும் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே,

      வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. பின்வரும் பகுதிகளையும் படித்து தங்களின் மதிப்பிற்குரிய கருத்தைத் தெரிவிக்கவும். என் வாழ்வில் அதிசயங்கள் ஒன்றும் நிகழவில்லை. தங்கள் கூற்று: <> முயற்சியே கூலி கொடுக்குமா? இல்லையென்றால், அந்தக் கூலி யாரால், எப்போது கொடுக்கப்படும்?
      நன்றியுடன், இன்னமுதம்

      Delete